யாழ்ப்பாணம் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் பலர் அனுமதி!

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன

நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ம ருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில்வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் நேற்று இரவு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய சிகிச்சைகள் மருதங்கேணி வைத்தியசாலையில்வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 4 மருத்துவர்கள் நியமிக்கபட்டுள்ளனர்

Be the first to comment

Leave a Reply