பயிலுநர் பட்டதாரிகளின் பயிற்சித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் பயிற்சித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தொடரும் கொரோனா அபாய நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

50 ஆயிரம் பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அவர்களுக்கான 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply