நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்..!

இந்தியா- சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை 312 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது.ஆரம்பத்தில் சற்று விலை உயர்வு காணப்பட்டாலும் இறுதி நாட்களில் விலைச் சரிவு இருந்தது.ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் விலையேற்றம் காணப்பட்டது எனினும் இன்று மகிழ்ச்சியூட்டும் செய்தியாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 670 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் 4 ஆயிரத்து 709 ரூபாயாக காணப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் குறைந்துள்ளது.அதேபோல, நேற்று திங்கட்கிழமை ரூ.37 ஆயிரத்து 672 க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 312 ரூபாய் குறைந்து ரூ 37 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை!ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) ரூ.5,084லிருந்து இன்று ரூ.5,045 ஆகக் குறைந்துள்ளது.அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று ரூ 40,672 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ 312 க்கு குறைந்து ரூ 40,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலை!இதேவேளை, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.66.70லிருந்து இன்று ரூ.66.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ66,100 க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை:யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 24k தங்கம் ரூபா.104,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும் 22k தங்கம் ரூபா.95,500 வரையில் விற்பனையாகி வருகின்றது.
இதேவேளை, நேற்றைய நிலவரப்படி 24k தங்கம் ரூபா.103,500 க்கும், மேலும் 22k தங்கம் ரூபா.95,300 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply