தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்!

தியத்தலாவை – முருத்தலாவ பகுதியில் தனக்குத் தானே தீ மூட்டி பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.

முருத்தலாவ – கல்ஏதண்ட பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து பலத்த காயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த பெண்ணின் தற்கொலைக்கான  காரணம்  இதுவரையில்  அறியப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply