கிராமத்துடன் ஜனாதிபதியின் உறவாடல்” வேலைத்த்திட்டத்தின் ஹிம்பிலியாகட அபவிருத்தி பணிகள்

அத்தியாவசிய நிர்மாணப் பணிகள், சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளித்து நிகழ்ச்சித்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி மாத்தளை மாவட்டத்திற்கு சென்றிருந்த போது அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்திருந்தேன்.

கிராமிய மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எனது பயணத்தின் நோக்கமாக இருந்தது.

“கிராமத்துடன் ஜனாதிபதியின் உறவாடல்” இரண்டாவது நிகழ்ச்சியில் பங்குபற்றி – வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவில் கெம்புறு ஓய, லேடியன்கல, அலியாவல, வெஹரகல, ஹிம்பிலியாகல மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமங்களின் மக்களைச் சந்தித்து அந்த மக்களின் பிரச்சனைகளை அப்போது நான் கேட்டறிந்தேன்.

காணி உரிமை, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர், பண்ணை வளர்ப்பு, சிறுநீரக நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளை என்னிடம் மக்கள் முன்வைத்திருந்தனர்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள ஹெட்டிபொல நகரின் காணி உறுதி பிரச்சனைகளை தீர்க்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹிம்பிலியாகட கிராம மக்களுக்கு காணிகளுக்கான 110 காணி உறுதிகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஹிம்பிலியாகட ஆரம்ப பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம், ஆசிரியர் விடுதி, மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க ஹிம்பிலியாகட நாகவனாராம விகாரை வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றைப் பொருத்தும் பணிகள் கடற் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இராணுவத்தினர் சுமார் 2000 ஏக்கர் வயல் காணிகளுக்கு நீர்ப்பாசனத்தை வளங்கும் வில்கமுவ பிரிவில் உள்ள வத்தேகெதர மற்றும் தொடம்கொல்ல குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளைத் திட்டமிட்டு வருகின்றனர்.

நீர் ஊற்றுக்களை இனம்கண்டு 10 விவசாய கிணறுகளை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெஹரகல முதல் ஹெட்டிபொ நகரம் வரையிலான 2.8 கி.மீ நீளமான வீதி மற்றும் ஹிம்பிலியாகட குளத்திலிருந்து ஹிம்பிலியாகட கிராமத்திற்கான பாதை ஆகியவற்றிற் அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

ஹெட்டிபொல – ஹிம்பிலியாகட பாதையூடாகச் செல்லும் பேருந்து வண்டி ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திட்டங்களையும் மூன்று மாத காலப் பகுதிக்குள் நிறைவுசெய்து மக்களிடம் கையளிக்குமாறு அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

Be the first to comment

Leave a Reply