காணாமல் போயுள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் – ரவிகரன் தெரிவிப்பு

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்றவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  மீனவர்களிடம் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு காணாமல் போயுள்ள மீனவர்கள் எவ்வித இடர்பாடுகளுமின்றி, கரை திரும்பவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply