கன்சியூலர் பிரிவின் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானம்

கன்சியூலர் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு செலின்கோ கட்டடத்தில் அமைந்துள்ள கன்சியூலர் பிரிவு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மறு அறிவித்தல் வரை மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், வௌிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்களை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply