சஜித் பிரேமதாசாவை பைத்தியக்காரன் என விளித்த ஆளும் தரப்பு!

பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து நீங்கள் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன தலைமையில் நடைபெறுகின்றது..

இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தநிலையில், பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து தெளிவுபடுத்த முடியுமா என சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியிருந்தார்.

அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதுகுறித்து நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். பிரதமர் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றார். அவர் மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் செய்வார்“ எனக் குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “பிரதமரை நீங்கள் அலுவலக உதவியாளராக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பிரதமரை நினைவில் கொண்டு அப்படி செய்ய முயற்சிக்க வேண்டாம்“ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்தும், நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், “இந்த பைத்தியக்காரனை அமரச்சொல்லுங்கள். நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்கச் சொல்லுங்கள்“ என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply