4000 கோழி குஞ்சுகள் தீயில் எரிந்து நாசம்

திருவள்ளூர் மாவட்டம்  கல்மேடு கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கோழிக்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் கோழிகள் இருந்துள்ளன.

இந்த கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக கோழிகள் சூடுப்படுத்தும் மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 4000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஏனைய கோழி குஞ்சுகளை காப்பாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீ விபத்தில் 20லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது

Be the first to comment

Leave a Reply