வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்க நடவடிக்கை..!

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரிய வெங்காயம் வரத்து குறைந்து காணப்படுகின்ற நிலையில் கடந்த 3 வாரங்களாக விலை அதிகமாகவே உள்ளது. 1கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு சில இடங்களில் 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றது. இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக நாளை புதன்கிழமை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் மற்ற மாவட்டங்களிலும் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Be the first to comment

Leave a Reply