தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

மீனுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களை பரிசோதனைக்கு உற்படுத்துவதற்காக கொக்கள் சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில் வீடுதிரும்புவதற்காக இருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தற்போது கொழும்பு IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த 24 பேரும் தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் வீடு திரும்பவிருந்த போது எடுக்கப்பட்ட இரண்டாவது pcr பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply