சொகுசுக் கார் விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20.10.2020) அதிகாலை தேற்றாத்தீவு உப தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த குறித்த காரே வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுள் சென்று விழுந்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த குறித்த காரே வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுள் சென்று விழுந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply