உலக வர்த்தக நிலையத்தின் ஊழியருக்கு கொரோனா உறுதி!

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

உலக வர்த்தக நிலையத்தின் மேற்குக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் இயங்கும் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவரே இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பணியாளருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பணியாளர் கடந்த 8ஆம் திகதி முதல் அலுவலகத்திற்கு வருகைத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. அத்துடன், ஊழியர்களிடமும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உலக வர்த்தக நிலையத்தின் செயற்பாடுகளை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply