ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை இன்று (20) காலை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதிகளில் பயணிக்கு போது கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தாது பயணிக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply