விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்! வெட்கக்கேடான விஷயம் – இணையத்தில் கொதிக்கும் பிரபலங்கள்

தென்னிந்திய நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவத்தினால் பிரபலங்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல.

இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “மனிதர்களா இவர்கள்? இந்த நபரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்து வேறுபாட்டை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்டா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை யாரும் மாற்றப்போவதில்லை. ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வது பற்றி பொதுவில் சொல்லக்கூடிய இந்த நபர் ஒரு குற்றவாளி.

இவ்வாறு பேசக்கூடிய ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள். எப்படி ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக ஆண்களால் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைப்பார்த்து மௌனமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply