பிரதமரின் அலுவலகத்தில் முக்கிய பதவியில் யோசித ராஜபக்ச! ஒரு வருடத்திற்குப் பின்னர் பதில் – விடுக்கப்பட்டுள்ள சவால்

பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக கடமையாற்ற தனக்கு அனுபவம் இருப்பதாக யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனது சேவையை பார்த்து, அதன் பின்னர் என்மீது எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாமெனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தனக்கு வழங்கப்பட்ட பிரதமரின் பணியாளர் சபை பிரதானி பதவி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆகவே ஒரு வருடத்திற்கு பின்னர் என்னிடம் எதனையும் கேளுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் 2016 ஆம் ஆண்டு இராணுவத்தால் விசாரணை இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டேன். எனவே, அந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு வேலை செய்தேன்.

ஆகவே அந்த பயிற்சியால், எனக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கிடைத்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதுமட்டுமன்றி, நாங்கள் நல்லது செய்தாலும் சரி கெட்டது செய்தாலும் சரி, சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும். நல்லது அல்லது கெட்டது என்பதை சமூகம் தான் தீர்மானிக்கிறது. நான் பணிபுரியும் முறையைப் முதலில் பாருங்கள். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் முன்வையுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply