மண மகன் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா: 4 கிராமங்கள் முடக்கம்!

மண மகன் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா: 4 கிராமங்கள் முடக்கம்!

குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற மணமகன் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 4 கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்திற்குட்பட்ட கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு இவ்வாறு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் குறித்த தரப்பினர் கலந்து கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளகப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் நேற்றைய தினம் (ஒக்-18) 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த திருமண நிகழ்வில் 400 இற்கு அதிகமானவர்கள் பங்கேற்றதாக சொல்லப்படும் நிலையில் குறித்த 4 கிராமங்களுக்கும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply