மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பல விடயங்களை விசாரணையின் இறுதிநாட்களில் வெளிப்படுத்த தயார் என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரித்து வருகின்ற நிலையில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலரும் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர அவர்களும் முன்னிலையாகியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளிக்க சென்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை நான் எங்கும் தெரிவிக்காத விடயங்களை ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதிநாட்களில் வெளிப்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ள அவர் ஆணைக்குழு அனுமதி வழங்கினால் நான் அவற்றை வெளிப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலை தடுக்க முயன்றதாக பொலிஸாரின் மேல் மாத்திரம் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது பொலிஸாருக்கு கூட்டுப்பொறுப்புணர்வே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல நெருக்கடிகளின் மத்தியில் நானும் எனது கீழ் பணிபுரிந்த அதிகாரிகளும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவியையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கியவர்களிடமிருந்து திடீரென ஒத்துழைப்பு குறித்தும் உரிய விசாரணைகள் இல்லாதது குறித்தும் பணம் வெளிநாட்டு நிதி மற்றும் அரசியல் குறித்தும் ஆழமாக ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பூஜித்ஜயசுந்தர விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகஅர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை இதன் காரணமாக அவர்கள் மத்தியில்ஏற்பட்ட உளவியல்தாக்கங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்து அதனை மறுத்து நடக்கவில்லை எனவும், பல சிக்கல்களுக்கு மத்தியில் கடமை செய்த போதிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply