இலங்கையில் அடுத்தகட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்திலிருந்து! எச்சரிக்கும் மத்தும பண்டார

இலங்கையில் அடுத்தக்கட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்தில் இருந்தே ஆரம்பிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

எனவே 20வது அரசியலமைப்பு திருத்த விவாதத்துக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களை சந்திக்கின்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே அது நாடாளுமன்றத்தில் ஏனையவர்களுக்கு பரவும் ஆபத்தும் இருக்கிறது. இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை 20வது திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ரஞ்சித மத்தும பண்டார கோரியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply