பிரித்தானியாவில் இலங்கைச் சிறுமிக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை! எச்சரிக்கும் பாடசாலை நிர்வாகம்

தெற்கு லண்டனில் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து கல்வி கற்கும் துஷா கமலேஸ்வரனை பாடசாலைக்கு வருமாறும், தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் பாடசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள கடை ஒன்றில் தனது ஐந்து வயதில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய துஷா கமலேஸ்வரனுக்கு மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இதன்போது துப்பாக்கி குண்டு அவளது முதுகெலும்பின் ஏழாவது எலும்பை உடைத்து, இதயத் தடுப்புக்கு அனுப்பியது. அதில், அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன், எழுந்து நடக்க முடியாத வகையில் செயலற்ற நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 15 வயதான துஷா வீட்டிலிருந்தே கல்வியை தொடர்கின்றார்.

எனினும் எசெக்ஸ், இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகம் “துஷா கமலேஸ்வரன் பாடசாலைக்கு திரும்புவது மேலும் தாமதமானால், அபராதம் செலுத்த நேரிடும்” என அவரது பெற்றோரிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.

இச்சிறுமியின் பெற்றோர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

துஷா தொடர்பில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பி.ஜே.சுரேஷ் அளித்த கடிதத்தை ஏற்க மறுத்த பாடசாலை நிர்வாகம், அந்த கடிதத்தில் போதிய தகவல் இல்லை என நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் சுரேஷ், பாடசாலை நிர்வாகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியும், பலனளிக்கவில்லை என துஷாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் துஷா திங்களன்று பாடசாலைக்கு சென்றதாகவும், எனினும் இது பாதுகாப்பற்றதாகவும், கவலையை தருவதாகவும் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply