யாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தையொன்று நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளவாலை – உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த தனீஸ்வரன் அக்ஷயன் எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், நேற்றைமுன் தினம் குழந்தைக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு வீட்டில் வைத்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர். எனினும் காய்ச்சல் குணம் அடையவில்லை.

இதனால் நேற்றுக் காலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டிருந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. என்ன காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

இறப்பு விசாரணையினை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரால் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply