கட்டுநாயக்க ஊழியர்களுக்கு இன்று முதல் விதிக்கப்பட்ட தடை உத்தரவு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் இன்று முதல் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளால் வழங்கப்படும் வாகங்களில் மட்டுமே தங்கள் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரி அகில ரணசிங்க தெரிவித்தார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் தங்கள் சேவை அடையாள அட்டைகளை ஊரடங்கு உத்தரவு உரிமமாகப் பயன்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளனர்.

இவ்வாறு போலி காரணங்களுக்காக சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால், மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கட்டுநாயக்க பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

அதன்படி, தொழிலாளர்கள் இன்று சொந்த வாகனங்களை பயன்படுத்த முடியாது என்றும், அருகிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள ஊழியர்கள் கால்நடையாக தொழிற்சாலைகளுக்கு வரலாம் என்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply