கொரோனா தொடர்பான மிகப்பெரிய கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தார் இராணுவத்தளபதி

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்பத்திற்கு வெளிநாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அதன் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா காணப்படவில்லை. கொழும்பு பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியே இறுதியாக சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சிலர் வருகைத்தந்தனர். கடல் மார்க்கமாக வெளிநாடுகளில் இருந்து 6 பேர் வந்துள்ளனர். அவர்கள் 6 பேரும் நேற்றைய தினம் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய பார்த்தால் சில முறையில் சில விடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எனினும் உறுதியான முறையில் கூற முடியாத நிலை உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்விக்கு தற்போது இராணுவத்தளபதி பதிலளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply