சற்றுமுன் கைது செய்யப்பட்டார் ரிசாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் தெஹிவலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து ரிசாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து ரிசாத் பதியுதீன் தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் ஓடி ஒளிந்து விட்டதாகவும், அரசாங்கமே அவரை பாதுகாப்பதாகவும், எதிர்க்கட்சியே பாதுகாப்பதாகவும் பல வதந்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ரிசாத் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply