தேவையற்ற ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேவையற்ற ஒன்று கூடலை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியவசிய சேவைகளை மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவுவதால், நபர்கள் ஒன்றுக் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த வரையில் குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை அரச நிறுவனங்களில் அத்தியவசிய சேவைகளை மாத்திரம் வழங்கி, மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறு அரச சேவைகள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மறு அறிவித்தல் விடுக்கும் வரை அரச நிறுவனங்களில் பொது மக்கள் தினத்தை நடத்த வேண்டாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply