5 ஆயிரம் ரன்களை எடுத்த டேவிட் வார்னர்

இதுவரை ஐபிஎல் போட்டிகளிலேயே 5, ஆயிரம் ரன்களை  குவித்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர் ஆவார்.

சாதனை:

சன் ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அபுதாபியில்:

டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35ஆவது ஆட்டத்தில் மோதின.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றதால், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முடிவு:

20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து முதலில் தனது ஆட்டத்தை முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

எப்படியாவது 164 ரன்கள் எடுத்து, வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடியது. இவ் விளையாட்டின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.

 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் சாதனையும் படைத்துள்ளார்.

டேவிட் வார்னர் இந்த போட்டியின் முடிவில் மொத்தமாக 5 ஆயிரம் ரன்களை அடித்து குவித்துள்ளார். அவருக்கு முன் விளையாண்ட, முதல் மூன்று இடங்களில் விராட் கோலி (5759), ரெய்னா (5368), மற்றும் ரோகித் சர்மா (5149) ஆகியவர்கள் உள்ளனர். வார்னர்  மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் (135) விளையாடியிருந்தாலும் 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை அடைந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply