தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் வெளியிட்ட காரணம்

காலி எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து இருவர் காயமடைந்துள்ளனர் என பொஸார் தெரிவித்துள்ளர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது

ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மது அருந்திக்கொண்டிருந்த நான்கு நபர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுடப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் துப்பாக்கிதாரியை தாக்கிக் காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply