மீசாலையில் பரீட்சை முடித்து வெளியே வந்த மாணவியை வீதிக்கடவையில் மோதித்தள்ளிய வாகனம்

நடைபெற்றுவருகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிவரும் மாணவி ஒருவர் பரீட்சையில் தோற்றிவிட்டு ஏ -9 நெடுஞ்சாலையில் மஞ்சள் கடவை ஊடாக வீதியைக் கடக்கமுற்பட்ட போது பட்டா வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரியில் கணித பாடத்தில் தோற்றிவிட்டு வீதியைக் கடக்க முற்பட்ட மாணவியே விபத்தில் சிக்கியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிய திசையில் பயணித்த மினிபஸ் ஒன்றின் பின்னால் சென்ற பட்டா ரக வாகனமே மாணவியை மோதியுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் தலையில் படுகாயம் அடைந்துள்ளமையால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply