ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!

ஜனாதிபதி செயலகம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள வரும் மக்களுக்காக தபால்,தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றினூடாக தொடர்பு கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைக்கு அமையவே இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லாமல் தமது தேவைகளை வீட்டில் இருந்தே செய்து கொள்ள முடியும்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பு பிரிவில்011 43 54 550 மற்றும்011 23 54 550 என்ற  தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதி தொடர்பிலும் தொடர்பு கொள்ள முடியும்.

அல்லது publicaffairs@presidentoffice.lk என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply