கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 22 பேரும் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 2036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5497 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இந்த தொற்றுக்குள்ளான 2081 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply