கொரோனா பற்றி உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி?

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் அனைத்தும் நம்மை எளிதாக வந்தடைகிறது. பெரியவர்கள் நமக்கே பதற்றத்தை ஏற்படுத்தும் போது குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். அவர்களுக்குள் ஓடும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூட தெரியாது. ஒவ்வொரு நாளும் கொரோனா பற்றிய செய்திகளை ஆன்லைனில் அல்லது டிவியி அவர்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எனவே இது அவர்களுக்கு மன அழுத்தம், பயம் மற்றும் சோகத்தை உருவாக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் குழந்தைகளுடன் ஒரு வெளிப்படையான, ஆதரவான கலந்துரையாடல் அவசியம் தேவைப்படுகிறது. இப்போது குழந்தைகள் அனைவரும் விடுமுறை மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியை தடுக்க வேண்டாம். இந்த விஷயங்களை உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி என்பதற்கான குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
1. அவர்கள் சொல்வதை கவனியுங்கள் 
உங்கள் குழந்தைக்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி என்ன தெரிந்திருக்கிறது என்று அறிய உங்களிடம் பேச வைப்பதே முதல் வேலை. டிவி பத்திரிக்கை குடும்பத்தினர்கள் சுற்றத்தார் நண்பர்கள் என அனைவரிடமும் இருந்து நிறைய தகவல்களை குழந்தைகள் சேகரித்து வைத்திருப்பார்கள். இந்தப் பிரச்சனை பற்றி என்ன புரிதலில் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். உங்கள் பிள்ளையை ஏதுனும் ஆக்டிவிட்டியில் ஈடுபட வைத்து கொரோனா வைரஸ் பற்றி மெல்ல கேட்கலாம். அவர்கள் எப்படி இதை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று முழுமையாக கேட்டு அதற்கேற்ப விளக்கம் அளிக்கலாம்.
இந்த வைரஸ் பற்றி கவலை அளிப்பதாக தெரிந்தால் அவர்களுக்கு தைரியம் சொல்லி தூய்மையுடன் இருப்பது மற்றும் சமூக விலகலை பின்பற்றுவது போன்ற முக்கிய அம்சங்களை கடைபிடித்தாலே போதும் கவலைப்பட வேண்டாம் என்று தெளிவு படுத்துங்கள். இந்த வைரஸ் பற்றிய பயம் இருந்தால் அவர்களை கேலி செய்யாமல் பயம் வருவது இயற்கை, நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதை சொல்லுங்கள். நீங்கள் அவர்களுக்கு முழு கவனம் செலுத்துவதை உணர செய்யுங்கள். இது பற்றி எந்த சந்தேகம் என்றாலும் நீங்கள் தயராக இருப்பதை உறுதி படுத்துங்கள். இந்த வைரஸ் பற்றி தெரியாத சிறு பிள்ளைகளுக்கு தூய்மையுடன் இருப்பதையும் இதனால் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை மட்டும் விளக்குங்கள். அவர்களுக்குள் பயத்தை திணிக்காதீர்கள்.
2. உண்மையை சொல்லுங்கள்  
குழந்தைகளுக்கு இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முழு உரிமை உண்டு. அதனால் பெரியவர்களாகிய நாம் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த வைரஸை பற்றி பதட்டத்தை உண்டாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இது பற்றி அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்லாமல் ஆராய்ந்து குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்தலாம். அந்த தேடலில் அவர்களையும் சேர்த்து கொள்வது மேலும் சிறப்பு. இணையத்தில் வரும் அனைத்து விஷயங்களும் உண்மையல்ல சிறந்த வல்லுநர்கள் சொல்வதை மட்டும் நம்பவேண்டும் என்று புரிய வையுங்கள். UNICEF and the World Health Organization(WHO) போன்ற சர்வேதேச இணையதளங்கள் சிறந்த தகவல்கள் தருவதை பகிர்ந்து கொள்ளலாம்.

Be the first to comment

Leave a Reply