கொரோனா அச்சத்தால் நீர்கொழும்பில் 200 ற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபை அங்காடி கடை தொகுதியில் உள்ள  ஆடை விற்பனை நிலையத்தின் வர்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று பகல் மாநகர சபையின் பொதுசுகாதார பிரிவினால் மாநகர சபை அங்காடி தொகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீர்கொழும்பு அக்கரபணக பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் திவலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவ விழா ஒன்றுக்கு சென்று வந்துள்ளதக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த அங்காடி கடைத்தொகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் நாளயத்தினம் திங்கட்கிழமை காலை PCR பரிசோதனைக்கு உற்படுத்தப்படவுள்ளதகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்குள்ள 200 ற்கும் மேற்பட்ட கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply