உயர்தர பரீட்சையில் உதவிய மேற்பார்வையாளர் கைது .!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் மாணவர் ஒருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் வா
துவ மத்திய கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சை மண்டபத்தின் மேலதிக மேற்பார்வையாளர் காவல்துறையினரிடம் முறையிட்டதை தொடர்ந்து குறித்த மேற்பார்வையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளர் பரீட்சை ஆணையாளரின் பரிந்துரையின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பரீட்சை ஆணையாளருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply