இலங்கைக்கு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் இந்த கருவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சி.ஆர் இயந்திரங்களும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

இந்த பி.சி.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டன.

Be the first to comment

Leave a Reply