அம்பாறையில் துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு

அமெரிக்காவின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்திய 40 ரவைகளையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அம்பாறை- திருக்கோவில் விசேட அதிரடிப்படையினருக்கு, இரகசிய தகவலொன்று நேற்று (சனிக்கிழமை) கிடைக்கப்பெற்றள்ளது.

அதனடிப்படையில் சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருந்தப்போது, பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தேடுதல் நடவடிக்கையானது திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டதுடன் குறித்த துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply