தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்- மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இன்று இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் காணப்படும்.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர்.

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றது.எனினும் கடந்த இரு நாட்களுக்கு முதல் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்துள்ளது தங்கம் விலை.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1384 குறைந்து ரூ.37,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு, 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.ஆயிரத்து 512க்கு குறைந்து ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை

இதேவேளை இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை  24k தங்கம் ரூபா 103,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.

மேலும் 22k தங்கம் ரூபா.95,000 வரையில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply