டுவிட்டரின் புதிய திட்டம்: மகிழ்ச்சியில் பயனர்கள்

பேஸ்புக்கிற்கு அடுத்ததாக முன்னணி சமூகவலைத்தளங்கள் வரிசையில் டுவிட்டர் காணப்படுகின்றது. இப்படியான நிலையில் டுவிட்டரில் மொழிபெயர்ப்பு வசதியை தருவதற்கு டுவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி பயனர்களின் டுவீட்களை வேற்று மொழியிலும் படித்தறிவதற்கு ஏதுவாக இருக்கும். பயனர்கள் தாம் விரும்பிய நேரத்திலோ அல்லது தானியங்கி முறையிலோ மொழிபெயர்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ் வசதியானது தற்போது பிரேசிலில் பரீட்சார்த்த ரீதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ் வசதி அறிமுகம் செய்யப்படும். இதற்கு முன்னர் பேஸ்புக் வலைத்தளத்தில் இவ் வசதி தரப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply