கொரோனா நோயாளி பேரூந்தில் பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்

கொழும்பில் இருந்து மத்துகம  நோக்கி பயணித்த பேரூந்தில் கொரோனா தொற்றுக்குள்ளான  தாதி ஒருவர்  பயணித்ததை தொடர்ந்து அந்த பேரூந்தின் நடத்துனர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முறை தொடர்பில் அவர் ஊடகத்திற்கு தெளிவு படுத்தியுள்ளார்.

தீபால் வீரவன்ஸ என்ற பேரூந்துடைய நடத்துனரே இவ்வாறு தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,நங்கள் தினமும் எமது பேரூந்தில் கொழும்பு தேசிய வைத்தியலாயின் தாதிகள் மற்றும்  ஊழியர்களை ஏற்றி செல்கின்றோம்.

இதன் காரணமாக நங்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாகவே இருந்தோம்.

இருந்தும் எனக்கும் சாரதிக்கும் உடலில் சில பகுதிகளில் ஏற்பட்ட வலி காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானித்தோம்.

இதனையடுத்து களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு சென்ற நன் pcr பரிசோதனைகளை மேற்கொண்டதில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளேன் என உறுதிசெய்யப்பட்டது.

நாட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறான தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply