இலங்கையில் இருந்து செல்லும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.!

இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ள  அனைத்து விமான பயணிகளுக்கும் தாம் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 72 மணிநேரத்திற்குள் PCR பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாளையத்தினம் (18)  மலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வரம் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதகவும் வெளிவிவகார அமைச்சு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply