இனம்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் எரிப்பு

அம்பாறை- கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்புக்கு முன்னால் தரித்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும்

துவிச்சக்கரவண்டிகள் ஆகியவைகள் இனந்தெரியாத சந்தேகநபர்கள் தீயிட்டு நாசமாக்கியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 3 மோட்டார் சைக்கிள் உட்பட 5 துவிச்சக்கரவண்டிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் மின்சார மின்மானிகள் சேதமடைந்த போதிலும் மின்கசிவு ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.

முஹம்மட் ஜெமில் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று முன்னெடுத்துள்ளனர்.

இந்த வீட்டுத்தொகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர்கள் சிலர், திடீரென உட்புகுந்து,

இத்தீயினை வைத்து தப்பி சென்றதாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply