அலை சறுக்கல் விளையாடி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அமைச்சர்.

ஹம்பாந்தோட்டை கடற்கரை பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று காலை ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் அலையில் சறுக்கி விளையாடும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விளையாட்டில் நாமல் ராஜபக்சவின் விளையாட்டு பயிற்சியாளரான அவுஸ்திரேலிய பிரஜை ஸ்டீவ் டெய்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் அதிகளவில் விளையாடும் இவ்வாறான விளையாட்டுக்குகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை தவிர ஹம்பாந்தோட்டை கடற்கரை பூங்காவில் நேற்றிரவு கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்பரை கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

Be the first to comment

Leave a Reply