“அரசு ரிஷாட் பதியுதீனைப் பாதுகாக்கிறது”

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்று வெளியாகும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்பதாக குறிப்பிட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச்சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியாணை தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்துவிட்ட போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்யத் தவறிவிட்டது.

மேலும் முன்னாள் அமைச்சரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கிடையில், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரிஷாட் பதியுதீனை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார், இந்த மனு எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply