அதிகாலையில் நகரத்தையே அதிரவைத்த ஏவுகணை தாக்குதல் ;தூக்கத்திலேயே கொல்லப்பட்ட மக்கள்

இன்று அதிகாலை ஆஜர்பைஜனின் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சாவில் நடாத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஏவுகணை தாக்குதலை ஆர்மனிய நடாத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அஜர்பைஜான் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஆர்மினிய குற்றம் சாட்டியுள்ளது.

இன்று அதிகாலை நடாத்தப்பட்ட இந்த ஏவுகனை தாக்குதலில் 13 பேர் தூக்கத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 40 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சுமார் 20 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய நாகோர்னோ – கராபாக் பிராந்தியத்தில் ஆர்மினிய-அஜர்பைஜான் இடேயேயான பயங்கர மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் இடமெபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யயப்பட்ட பிறகும் இரு நாடுகளும் தொடர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அஜர்பைஜானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஆர்மினிய , நகோர்நா – கராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை நடாத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply