சீன அதிபரின் அவசர உத்தரவு – தயார் நிலையில் இராணுவம்!

சீன படையினரிடம் யுத்தமொன்றினை எதிர்கொள்வதற்குரிய சக்தியையும் மனோநிலையையும் தயார்படுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவின் தென்பகுதி மாநிலமொன்றில் அமைந்துள்ள படையினரின் தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

யுத்தமொன்றினை எதிர்கொள்வதற்கு உங்களை தயார் நிலையில் வேண்டும்.

உயர்மட்ட விழிப்புணர்வை பேணுவதுடன், மிகவும் விசுவாசமாகவும், நம்பகத் தன்மையுடனும் நாட்டுக்காக சேவை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய்வான் விவகாரம் மற்றும் கொரோனா வைரஸின் தோற்றுவாய் குறித்து சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் என்றுமில்லாத வகையில் உச்சநிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply