வவுனியா பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள பகுதிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது!

வவுனியா-மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர்

ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன்வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது.

குறித்த பகுதி இதுவரை காலமும் பெற்றோல் செட் சந்தி என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply