2022ல் தான் கொரோனா மருந்து கிடைக்குமாம்..

ஜெனிவா: இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகலாம், மேலும் அதைப் பரப்பவும் செய்வார்கள். எனினும் வயதானவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களைக் காட்டிலும் அவர்கள் கடுமையான சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கு யாராவது தரமான மருந்து கண்டுபிடித்தால், நாடுகளும், உலக சுகாதார அமைப்புகள் சர்வதேச அமைப்புகளும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேலை செய்ய வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் வரிசை பணியாளர்களுக்கு முதலிலும், மற்றவர்களுக்கு அதைத் தொடர்ந்து வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அதைத்தொடர்ந்து ஆரோக்கியமான, மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்க கொடுக்க வேண்டும்

Be the first to comment

Leave a Reply