வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லை -இராணுவ தளபதி சவேந்திர சில்வா

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் வைத்தியசாலைகளில், நோயாளர்கள் கட்டில்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 13 வைத்தியசாலைகளில் 170 கட்டில்கள் மாத்திரமே மீதமாக உள்ளதென கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

13 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 1712 கட்டில்கள் காணப்பட்டன. அதில் 1542 கட்டில்களில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 127 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த கொரோனா நோயாளிகள் ஆகும்.

ஏனைய நோயாளிகளில் 1415 பேர் மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்கள்.

இதேவேளை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வட மாகாணத்தில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply