வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று இரவு பொலிஸ் அதிகாரி வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

அவ்வேளை, குறித்த  வீதியால் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளார்.

உழவு இயந்திரம் நிறுத்த முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து பொலிஸ் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிசார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply