வவுனியாவில் 10 பேர் கைது

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மடுகந்தை விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து,

வவுனியா பாவற்குளம் பகுதியில் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூபா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் , கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யபட்ட நபர்கள் நேற்றயதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply