லேண்ட்ரோவர் டிஃபென்டர் நிறுவனத்தின் கார் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய சொகுசு கார் நிறுவனத்தின் லேண்ட்ரோவர் டிபென்டர் ரோடு எஸ்யூவி என்னும் கார் விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கார் ஆனது முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கார் பார்ப்பவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த காரானது எந்த  மாதிரியான சாலைகளிலும் செல்லக்கூடிய அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது இந்தக் காரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை பார்க்கலாம்.

110 டிஃபென்டர்  இரண்டு மாடல்களில் இந்த கார் கிடைக்கிறது. இந்த மாடல்களும்  base, S, SE, HSE,மற்றும் First எடிஷன் என தலா ஐந்து வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. டிஃபென்டர் 90 மற்றும் டிஃபென்டர்110 இந்த இரண்டு கார்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பார்க்கலாம். இந்த இரண்டு கார்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு டிஃபென்டர் 90ல் மூன்று டோர் பாடி ஸ்டைலில் மட்டுமே உள்ளது. டிஃபென்டர் 110 ஐந்து டோர் பாடி ஸ்டைலில் உள்ளது.

இந்தியாவில் டிபென்டர் 110 ஐந்து டோர் பாடி ஸ்டைலில் உள்ள கார் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இருந்தாலும் டிஃபென்டர் 90 வெர்சனையும் அந்த நிறுவனமானது இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள ஷோரூம்களில் டிபென்டர் 110 மாடலின் SE மற்றும் FIRST EDITION இந்த இரண்டு வேரியண்ட் கார்களும் காணப்பட்டன. இப்போது லேண்ட்ரோவர் டிபென்டர் கார்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டிசைன் மற்றும் ஸ்டைலிங் :

இந்த லேண்ட்ரோவர் டிபென்டர் கார்கலளின் டிசைன் கண்ணைப் பறிக்கும் வகையில் உள்ளது. இதனை புகைப்படத்தில் வாயிலாக பார்க்கும்போது அதனை உணர முடியாது. இதனை நேரில் பார்க்கும் போதுதான் அந்த உணர்வானது நமக்கு கிடைக்கும்.  இந்த காரின் முன்பகுதியில் பொருத்தபடுத்தப்பட்டுள்ள டி ஆர் எல் கள் எல்இடி யூனிட்  ஹெட் லைட்டுகள் பார்ப்பவர்களின் கண்ணைப் பறிக்கும் வகையில் உள்ளது.

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் பம்பரின் கீழ்பகுதியில் பனி விளக்குகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு பெரிய பம்பரை பெற்றுள்ளது. இந்த காரின் பானெட்டில்  டிபென்டர் என்னும் பெயர் இடம்பெற்றுள்ளது. காரின் முன் பகுதியானது பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.


லேண்ட் ரோவர்
 டிபென்டர் எஸ்யூவியின் வெளிப்புறத்தில் மொத்தமாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இது தவிர காரை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன இதன் மூலம் 360 டிகிரி பார்வை கிடைப்பதுடன், இந்த காரை கரடு முரடான பாதைகளில் ஓட்டும்போது உதவிகரமாக இருக்கும் வகையில் அதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் ஐஆர்வியின்  மேலும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அடாப்ட் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் பிளான் அசிஸ்ட் ஆகியவற்றை இது கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் ஐஆர்வியில் வீடியோ வை காட்டுகிறது இந்த செயலியானது கண்ணாடி வழியாக பின் பகுதியை பார்க்க முடியாத நேரங்களில் ஓட்டுநருக்கு உதவியாக இருக்கும்.

இந்த எஸ்யூவி காரில் 20 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு விதங்களில் உள்ள பேட்டர்ன்களில் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயத்தில் விலை குறைவான வேரியண்ட்டுகளில் 19 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் டிபென்டர் நிறுவனமானது கிரவுண்ட் கிளியரன்ஸ் விஷயத்தை மிகவும் முக்கியமாக கருத்தில் கொண்டு காரை தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. பொதுவாக இந்த வகையான காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 18 மில்லிமீட்டர் இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், லேண்ட்ரோவர் டிபென்டர் நிறுவனமானது 291 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுத்துள்ளது. இந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் முறையின் மூலம் இந்த கார் ஆனது எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும் பயணம் செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த காரின் பின்பகுதியை பொருத்தவரை டிசைன்கள் டெயில்டைகளில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த காரின் ஸ்பேர் வீலானது பூட்டிலேயே பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி பின்பகுதியில் பேட்ஜ்கள் மற்றும் வேரியண்ட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி கார்களில் எந்த மாடல்களிலும் குரோம் பூச்சு களுக்கு வேலை இல்லாமல் லேண்ட் ரோவர் பார்த்துக்கொள்ளும்.

இன்டீரியர் மற்றும் வசதிகள் :

இந்த காரின் பின்பகுதியில் நமக்கு விசாலமான கேபின் கிடைத்துள்ளது. இந்த காரின் பெரிய பனரமிக், சன்ரூப் மற்றும் ஆல்பைன் விண்டோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபினில் அதிக ஒளியானது அனுமதிக்கப்படுகிறது. இந்த விண்டோகள் சஃபாரியின் வெளிப்புறத்தை நன்றாக ரசிக்க உதவுகிறது. லேண்ட்ரோவர் டிபென்டர் எஸ்யூவியில் மூன்று இன்டீரியர் வண்ணங்களின் தேர்வுகள் கிடைக்கின்றன.

டிபென்டர் எஸ்யூவி காரில் ஒட்டுமொத்தமாக 14 யூஎஸ்பிகள் மற்றும் சாக்கெட்டுக்குள் இதில் பூட் பகுதியில் 230 வோல்ட் சார்ஜ்ரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் முன்பகுதியில் பேசஞ்சர் மற்றும் ஓட்டுனர் அமரும் வகையில் வென்டிலேட்டர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது இந்த இரு இருக்கைகளிலும் சீட் மெமரி பொருத்தப்பட்டுள்ளது.

விலை குறைவான வேரியண்ட்டுகளில் துளைகளுடன் கூடிய இருக்கைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது ஹீட் மற்றும் கூல் ஆப்ஷன்கள் பொருத்தப்படவில்லை. இந்த வேரியண்ட்டுகளில் ஓட்டுநருக்கு மட்டும் சீட் மெமரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டீயரிங் வீலை மின்னணு முறையில் அட்ஜஸ் செய்து கொள்ளலாம். இதற்கு ஆட்டோ என்று பெயர் இந்த ஆட்டோ முறையில் ஓட்டுனரின் உயரத்திற்கேற்ப சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

அத்துடன் இந்த காரில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டச் ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது. இந்த காரின் ஸ்டீயரிங் வீல் லெதரால் சூற்றப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால் ஓட்டுநர் சாலையின் மீது முழூ கவனம் செலுத்த முடியும்.

எஞ்சின் சிறப்பம்சங்கள் :

லேண்ட்ரோவர் டிபென்டர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் பி-300 பிக்சர்ஸ் பி பவரையும் 400என்எம் திறனையும் பெற்றுள்ளது. லேண்ட்ரோவர் டிபென்டர் நிறுவனமானது டீசல் வேரியண்டையும் விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
விலை மற்றும் முன்பதிவு தகவல்கள் :

டிஃபண்டர் எஸ்யூவி காரின் விலைகளை லேண்ட்ரோவர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. அத்துடன் பதிவுகளையும் அறிவித்துவிட்டது. இதில் டிபென்டர் 90 மாடலின் விலை 69.99 லட்ச ரூபாய் முதல் 81.30 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிபென்டர் 110 மாடலின் விலை 76.57 லட்ச முதல் 86.27 லட்ச ரூபாய் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த விலையானது அனைத்து இந்திய ஷோரூம்களின் விலையாகும்.

Be the first to comment

Leave a Reply